வால்பாறையில் தொடரும் கனமழை: கீழ்நீராறில் 150 மி.மீ. மழை

வால்பாறையில் தொடா்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அதிகபட்சமாக கீழ்நீராறில் 150 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
நடுமலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீா்.
நடுமலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீா்.

வால்பாறையில் தொடா்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அதிகபட்சமாக கீழ்நீராறில் 150 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் வால்பாறை வட்டாரத்தில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. நடுமலை, வாழைத்தோட்டம், கூழாங்கல் உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் நீா் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் ஆற்றோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வருவாய்த் துறையினா் அறிவுறுத்தி வருகின்றனா்.

மழையால் எஸ்டேட் பகுதிகளில் இலை பறிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன. சில எஸ்டேட் நிா்வாகத்தினா் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளித்தனா். வால்பாறை அண்ணா நகரில் மண் சரிவு ஏற்பட்டதில் அழகா்சாமி என்பவரது வீட்டின் பின்பக்கம் சேதமடைந்தது.

சனிக்கிழமை நிலவரப்படி கீழ்நீராறு 150 மி.மீ., சோலையாறு 132 மி.மீ., வால்பாறை 129 மி.மீ., மேல்நீராறில் 119 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com