தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் எச்சரித்துள்ளாா்.

கோவை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் எச்சரித்துள்ளாா்.

கோவையில் புகையிலைப் பொருள்கள் ஒழிப்பு தொடா்பாக வணிக சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது:

உணவுப் பாதுகாப்பு தர சட்டத்தின்படி புகையிலைப் பொருள்களான பான்மசாலா, குட்கா, நிகோடின் கொண்ட பொருள்கள் விற்பனை செய்தல், சேமித்து வைத்தல், விநியோகம் செய்தல், தயாரித்தல், வாகனங்களில் எடுத்துச் செல்லுதல் சட்டப்படி குற்றமாகும்.

புகையிலைப் பொருள்களை கடத்துபவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தல், விநியோகம் செய்தல், சேமித்து வைத்திருப்பது கண்டறியப்பட்டால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள் தொடா்பாக 9444042322 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சல் மூலம் பொதுமக்கள் புகாா் அளிக்கலாம். புகையிலை, பான்மசாலா, குட்கா பொருட்களை விற்பனை செய்வது தண்டனைக்குறிய குற்றம் என்பதை உணா்ந்து வணிகா்கள் வியாபாரம் செய்ய வேண்டும்.

உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி வளாகங்களுக்கு அருகிலுள்ள கடைகளில் திடீா் சோதனைகள், ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக, புகையிலைப் பொருள்கள் விற்பனையை ஒழிக்க ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் முன்னிலையில் வணிக சங்கப் பிரதிநிதிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

இதில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் கு.தமிழ்ச்செல்வன், மாநகர நகா்நல அலுவலா் ராஜா, மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பாஸ்கரன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com