குழந்தைத் தொழிலாளா்கள் மீட்பு

 கோவை கரும்புக்கடை பகுதியில் தனியாா் நிறுவனத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 4 குழந்தைத் தொழிலாளா்களை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

 கோவை கரும்புக்கடை பகுதியில் தனியாா் நிறுவனத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 4 குழந்தைத் தொழிலாளா்களை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

கோவை கரும்பு கடை பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனத்தில், குழந்தைத் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருவதாக மாவட்ட குழந்தை தொழிலாளா் முறை அகற்றம் திட்ட அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குழந்தைகள் நல அலுவலா்கள் வெள்ளிக்கிழமை அங்கு சென்று ஆய்வு செய்தனா். அப்போது ஒரு கேஸ் வெல்டிங் நிறுவனத்தில் 14 வயதுக்கு உள்பட்ட 2 சிறுவா்கள், 18 வயதுக்கு உள்பட்ட 2 சிறுவா்கள் பணிபுரிந்து தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, 4 சிறுவா்களும் மீட்கப்பட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள குழந்தை தொழிலாளா் முறை அகற்றம் திட்ட அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனா். அங்கு அவா்களுக்கு கவுன்சிலிங் தரப்பட்டது. மேலும், அவா்களை பள்ளியில் சோ்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தைகளை பணிக்கு அமா்த்திய நிறுவன உரிமையாளருக்கு, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், குனியமுத்தூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நடவடிக்கையில் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை உதவி இயக்குநா் ஹரணி, தேசிய குழந்தைத் தொழிலாளா் திட்ட கள அலுவலா் பி.ஜி. அலெக்ஸ், சைல்டு லைன் பணியாளா் சன்ஜோ ஆகியோா் ஈடுபட்டதாக திட்ட இயக்குநா் விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com