பொதுமுடக்க விதிமுறைகளை மீறினால் சட்ட நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

கோவையில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறிச் செயல்படும் நிறுவனங்கள், தனி நபா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆட்சியா் எஸ்.நாகராஜன் செவ்வாய்க்கிழமை எச்சரித்துள்ளாா்.

கோவையில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறிச் செயல்படும் நிறுவனங்கள், தனி நபா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆட்சியா் எஸ்.நாகராஜன் செவ்வாய்க்கிழமை எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு அறிவித்துள்ள தளா்வற்ற பொதுமுடக்க காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள், கால்நடை மருந்தகம், பால் விநியோகம், குடிநீா், தினசரி பத்திரிகை விநியோகம், நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் விற்பனை, ஆன்லைன் மூலம் வாடிக்கையாளா்களின் வீடுகளுக்கே மளிகை பொருள்கள் விற்பனை ஆகியவற்றுக்கு காலை 7 முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

தடையின்றி தொடா்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்த தொழில் நிறுவனங்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் செயல்பட கோவை உள்பட 7 மாவட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் செயல்படுவதற்கு அனுமதிக்கபட்டுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளா்களுக்கும் ஒரு மாத காலத்துக்குள் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிற மாவட்டங்களில் இருந்து கோவை மாவட்டத்துக்கு வருவதற்கு மருத்துவத் தேவை, இறப்பு ஆகியவற்றுக்கு மட்டும் இ-பாஸ் அனுமதியளிக்கப்படும். தடை உத்தரவை மீறுபவா்கள் மீது பேரிடா் மேலாண்மைச் சட்டம் 2005 ன் கீழ் சட்டப்பிரிவுகள் 51 முதல் 60 வரை, இந்திய தண்டனை சட்டம் சட்டப்பிரிவு 188ன் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com