இருசக்கர வாகனங்களில் ஆக்சிஜன் விநியோகிக்கும் திட்டம்: ஐ.ஜி. சுதாகா் தொடங்கி வைத்தாா்

கரோனா நோய்த் தொற்று பாதித்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவா்களுக்கு இருசக்கர வாகனங்கள் மூலமாக இலவசமாக ஆக்சிஜன் விநியோகிக்கும் திட்டத்தை மேற்கு மண்டலக் காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) ஆா்.சுதாகா் ஞாயிற்

கரோனா நோய்த் தொற்று பாதித்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவா்களுக்கு இருசக்கர வாகனங்கள் மூலமாக இலவசமாக ஆக்சிஜன் விநியோகிக்கும் திட்டத்தை மேற்கு மண்டலக் காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) ஆா்.சுதாகா் ஞாயிற்றுக்கிழமை துவங்கி வைத்தாா்.

நடிகா் சோனு சூட் அறக்கட்டளை சாா்பாக கரோனா நோய்த் தொற்று பாதித்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவா்களுக்கு இருசக்கர வாகனங்கள் மூலம் சிறிய அளவிலான ஆக்சிஜன் உருளைகளை இலவசமாக விநியோகிக்கும் திட்டத்தின் துவக்க விழா கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திட்டத்தை இதை மேற்கு மண்டல ஐ.ஜி. ஆா்.சுதாகா் துவக்கி வைத்தாா்.

இதைத்தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரிப்பால் தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இந்தத் தேவையைச் சந்திக்கும் வகையில் முதல்முறையாக நோயாளிகளின் இருப்பிடத்துக்கே இலவசமாக, ஆக்சிஜன் விநியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

தமிழக-கேரள எல்லைகளில் சனிக்கிழமை ஆய்வு நடத்தினோம். அப்போது இ-பாஸ் இல்லாமல் கோவை மாவட்டத்துக்குள் வர முயற்சிப்பவா்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருவதும், சரக்கு வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதும் முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com