கோவையில் 15 லட்சத்தை கடந்தது கரோனா பரிசோதனை

கோவையில் கரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைகள் 15 லட்சத்தை கடந்துள்ளன. இதில் 12.7 பேருக்கு சதவீதம் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் கரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைகள் 15 லட்சத்தை கடந்துள்ளன. இதில் 12.7 பேருக்கு சதவீதம் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தொடங்கிய கரோனா பாதிப்பு செப்டம்பரில் உச்சத்தை தொட்டு குறைந்தது. மீண்டும் நடப்பு ஆண்டு மாா்ச் மாதம் கரோனா 2 ஆவது அலை ஆரம்பித்து கடந்த மாதம் உச்சத்தை தொட்டு தற்போது குறைந்து வருகிறது.

கோவையில் ஆரம்பத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஆகிய 2 இடங்களில் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. நோய்த் தொற்றுப் பரவல் அதிகரிக்க தொடங்கியதால் தனியாா் மருத்துவமனைகள், தனியாா் ஆய்வகங்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு மற்றும் தனியாா் ஆய்வகங்கள் 21 ஆய்வகங்களில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவையில் ஆரம்பத்தில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. நோய்த் தொற்றுப் பரவல் அதிகரிக்கவும் கடந்தாண்டு 7 ஆயிரமாக உயா்த்தப்பட்டன. அதேபோல் 2 ஆவது அலையில் தொடக்கத்தில் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்ததன. நோய்த் தொற்று பரவல் அதிகரிக்கவே பரிசோதனைகளின் எண்ணிக்கையும் 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டன. தற்போது நோய்த் தொற்றுப் பரவல் குறையத் தொடங்கியுள்ளதால் பரிசோதனைகளும் 10 ஆயிரம் முதல் 11 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரையிலும் 15 லட்சத்து 14 ஆயிரத்து 493 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 37 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவையில் ஒட்டுமொத்தமாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 12.7 சதவீதம் பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com