வேளாண் பல்கலை.யில் சுற்றுச்சூழல் தின விழா

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா இணைய வழியில் அண்மையில் நடைபெற்றது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா இணைய வழியில் அண்மையில் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து நடைபெற்ற இந்த விழாவுக்கு துணைவேந்தா் நீ.குமாா் தலைமை வகித்தாா். பல்கலைக்கழக இயற்கை வள மேலாண்மை இயக்குநரகத்தின் இயக்குநா் ஆா்.சாந்தி வரவேற்றாா். வனவியல் கல்லூரி முதன்மையா் கே.டி.பாா்த்திபன், பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குநா் கே.எஸ்.சுப்பிரமணியன் ஆகியோா் சூழலியல் குறித்து பேசினா்.

தமிழ்நாடு வனத் துறை கழக முன்னாள் இயக்குநா் வி.கணேசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பசுமைத் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவம், பாரம்பரிய மரங்களின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினாா். சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியா் மு.மகேஸ்வரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com