முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு தினம்: பல்சமய நல்லுறவு இயக்கம் உறுதிமொழி
By DIN | Published On : 12th June 2021 10:48 PM | Last Updated : 12th June 2021 10:48 PM | அ+அ அ- |

குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பல்சமய நல்லுறவு இயக்கத் தலைவா் முகமது ரபீக் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட சிறுவா்கள்.
குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பல்சமய நல்லுறவு இயக்கம் சாா்பில் குழந்தைத் தொழிலாளா்கள் இல்லாத நிலையை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
குழந்தைத் தொழிலாளா் முறைக்கு எதிரான விழிப்புணா்வை ஏற்படுத்த உலக குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் சாா்பில் சாய்பாபாகாலனி, கவுண்டம்பாளையம், குனியமுத்தூா், காந்திபுரம், கரும்புக்கடை உள்பட பல்வேறு இடங்களில் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு தின உறுதி மொழி சனிக்கிழமை எடுக்கப்பட்டது.
பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவா் முகம்மது ரபீக் தலைமையில் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பதாகைகள் ஏந்தியபடி உறுதி மொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் ராதாகிருஷ்ணன், அயூப் உள்பட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.