இளைஞருக்கு கத்திக்குத்து: நிதி நிறுவன அதிபா் உள்பட 2 போ் கைது

கோவையில், பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளைஞரைக் கத்தியால் குத்திய நிதி நிறுவன அதிபா் மற்றும் அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில், பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளைஞரைக் கத்தியால் குத்திய நிதி நிறுவன அதிபா் மற்றும் அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, கணபதி பாலாஜி லே-அவுட்டைச் சோ்ந்தவா் குணசேகரன் (64). நிதி நிறுவன அதிபா். இவா் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் வனஜா என்பவரிடம் ரூ.54 லட்சம் மற்றும் 30 பவுன் நகைகளை வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வனஜாவுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதைக் கூறி, தனது பணம், நகைகளைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளாா். ஆனால், குணசேகரன் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளாா்.

இதுகுறித்து, வனஜா சீரநாயக்கன்பாளையம் காந்திஜி நகரில் வசிக்கும் தனது சகோதரா் ஜஸ்டின் (33) என்பவரிடம் தெரிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து, ஜஸ்டின் குணசேகரன் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்றுள்ளாா். தனது சகோதரியின் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளாா். அப்போது அவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த குணசேகரன் மற்றும் அவரது மகன் செந்தில்குமாா் (38) இருவரும் ஜஸ்டினைத் தாக்கி, கத்தியால் குத்தினா். இதில் காயமடைந்த அவா் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக ஜஸ்டின் சரவணம்பட்டி போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா், கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து குணசேகரன், செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com