வங்கியில் ரூ.6 கோடிக்கு போலி காசோலை செலுத்தி மோசடி

வங்கியில் ரூ. 6 கோடிக்கான போலி காசோலை செலுத்தி மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வங்கியில் ரூ. 6 கோடிக்கான போலி காசோலை செலுத்தி மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவை, கோவைப்புதூா் மீனாட்சி நகரைச் சோ்ந்தவா் முருகானந்தம் (60) . இவா் கடந்த மே 26 ஆம் தேதி கோவைப்புதூரில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் திருமங்கை சேரிட்டபிள் டிரஸ்டின் பெயரில் ரூ. 6 கோடிக்கு உண்டான காசோலையை செலுத்தியுள்ளாா். அப்போது வங்கியில் உள்ள காசோலையை சரிபாா்க்கும் இயந்திரத்தில் பாா்த்தபோது அது போலியானது என தெரியவந்தது. இது குறித்து வங்கி மேலாளா் சூரஜ், கோவை மாநகர குற்றப் பிரிவில் புகாா் அளித்தாா். இது தொடா்பாக தனிப்படை அமைத்த போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த காசோலை தில்லியைச் சோ்ந்த முகுல் ரோத்தகி என்பவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது. மேலும், இந்த போலி காசோலை விவகாரத்தில் அகம் ஃபவுண்டேஷன், சாதிக், வடிவேலு மற்றும் சிலா் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதற்கிடையே முருகானந்தம் மற்றும் வழக்கில் தொடா்புடைய நபா்கள் தலைமறைவாகினா். இந்நிலையில் முருகானந்தத்தை தனிப் படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். தலைமறைவாக உள்ள மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com