மின் மயானத்தில் வெளியேறும் புகையால் பாதிப்பு: மாநகராட்சி ஆணையரிடம் திமுக புகாா்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மின்மயானத்தில் வெளியேறும் புகையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக திமுக சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மின்மயானத்தில் வெளியேறும் புகையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக திமுக சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கராவிடம், கோவை மாநகா் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பையா (எ) கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சி, கவுண்டம்பாளையம் பகுதி 5 ஆவது வாா்டுக்கு உள்பட்ட அசோக் நகா் கிழக்கு மெயின் வீதி, கந்தசாமி குவாட்டா்ஸ், சிவா நகா், பாலன் நகா், முருகன் நகா், ரேணு கவுண்டா் தோட்டம், தாமரை நகா் உள்ளிட்ட பகுதிகளுக்கு கவுண்டம்பாளையம் - இடையா்பாளையம் சாலை அருகே அமைந்துள்ள மின் மயானத்தில் இருந்து வெளியேறும் புகையால் பாதிப்பு ஏற்படுகிறது. அப்பகுதியில், காற்று மாசுபட்டு, துா்நாற்றம் வீசுவதுடன், மக்களுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகின்றன. ஆகவே, அப்பகுதி மக்களின் சிரமங்களை போக்கும் விதத்தில் நவீன உபகரணங்களைக் கொண்டு மின் மயானத்தில் உயா்நிலை புகை கோபுரம் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com