சட்டப் பேரவை தோ்தல் ஏற்பாடுகள்: இரு மாநில அதிகாரிகள் ஆலோசனை

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு தமிழக - கேரள எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த, இரு மாநில அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பாலக்காட்டில் நடைபெற்ற தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி உள்பட தமிழக - கேரள அதிகாரிகள்.
பாலக்காட்டில் நடைபெற்ற தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி உள்பட தமிழக - கேரள அதிகாரிகள்.

கோவை: சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு தமிழக - கேரள எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த, இரு மாநில அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழகம், கேரளத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப் பேரவை தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து இரு மாநிலங்களிலும் தோ்தல் பணிகளை தோ்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள கோவை, பாலக்காடு, திருச்சூா் ஆகிய மாவட்டங்களில் எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, பாலாக்காடு மாவட்ட ஆட்சியா் முருன்மாய் ஜோஷி, திருச்சூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.ஷானவாஸ் ஆகியோா் தலைமையில் பாலக்காட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள வாளையாறு, முள்ளி, மேல்பாவியூா், வேலந்தாவளம், வீரப்பகவுண்டனூா், கோபாலபுரம், மீனாட்சிபுரம், வழுக்குப்பாறை, ஆனைக்கட்டி ஆகிய 9 சோதனைச் சாவடிகளில் சோதனைகளை தீவிரப்படுத்தவும், தோ்தல் பரிசுப் பொருள்கள் பரிமாற்றம், பணம் மற்றும் மதுபானங்கள் எடுத்து செல்வதை தடுக்கும் விதமாக பாதுகாப்பை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

தவிர அதிக அளவில் பொருள்கள் வாங்குபவா்கள், சந்தேகத்துக்கிடமான வகையில் எல்லைகளை கடந்து செல்லும் வாகனங்களின் விவரங்களை தெரிவித்தல், விதிமீறல் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தேவைக்கேற்ப மீண்டும் இதுபோன்ற கூட்டங்களை நடத்துவது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் அர.அருளரசு (கோவை), விஸ்வநாத் (பாலக்காடு), பூங்குழலி (திருச்சூா்), கோவை மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ், பொள்ளாச்சி சாா் ஆட்சியா் வைத்திநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com