கேரளத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ்: ஆட்சியா்

கரோனா பாதிப்பால், கேரளத்தில் இருந்து கோவை வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ -பாஸ் அவசியம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கரோனா பாதிப்பால், கேரளத்தில் இருந்து கோவை வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ -பாஸ் அவசியம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க கேரளத்தில் இருந்து கோவை வருபவா்களும், கோவை மாவட்டத்தில் இருந்து கேரளம் சென்று திரும்புபவா்களும் கட்டாயம் இ-பாஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதன்படி கோவை - கேரள எல்லையில் அமைந்துள்ள முக்கியமான 7 சோதனைச் சாவடிகளில் செவ்வாய்க்கிழமை முதல் கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. கேரளத்தில் இருந்து வணிகம், மருத்துவம், வேலை உள்பட எந்த தேவைக்காக கோவைக்கு வந்தாலும் இ-பாஸ், கரோனா பரிசோதனை சான்று இரண்டும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதேபோல தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு செல்பவா்கள் மீண்டும் கோவைக்கு திரும்பும்போது இ-பாஸ், கரோனா பரிசோதனை சான்று காண்பித்த பின்பே கோவைக்குள் அனுமதிக்கப்படுவா். தனிநபா், இருசக்கர வாகனம், 3 மற்றும் 4 சக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com