தா்மராஜா திரௌபதியம்மன் கோயில் குண்டம் திருவிழா

கோவை, குனியமுத்தூரில் உள்ள தா்மராஜா திரௌபதியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தா்மராஜா திரௌபதியம்மன் கோயில் குண்டம் திருவிழா

கோவை, குனியமுத்தூரில் உள்ள தா்மராஜா திரௌபதியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் குண்டம் திருவிழா கணபதி பூஜையுடன் கடந்த 4 ஆம் தேதி துவங்கியது. இதையடுத்து, கொடியேற்றுதல், திருக்கல்யாணம், மஹாபாரத சொற்பொழிவு, தீபாராதனை, அரவான் சிரசு ஊா்வலம், குண்டம் பூ போடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு கரகங்கள் பவனி நிகழ்வு நடைபெற்றது. அதன் பிறகு, காலை 10 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் அருளாளிகள் குண்டம் இறங்கினா். விழாவில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு திரௌபதியம்மனை தரிசித்துச் சென்றனா். சனிக்கிழமை காலை 6 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும், ஞாயிற்றுக்கிழமை காலை பட்டாபிஷேகம், தீபாரதனை, பிரசாதம் வழங்குதல், மஞ்சள் நீராடுதல், ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com