முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
தோ்தல்: தங்கும் விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடு
By DIN | Published On : 14th March 2021 11:30 PM | Last Updated : 14th March 2021 11:30 PM | அ+அ அ- |

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கோவை நகா் மற்றும் புகரில் தனியாா் தங்கும் விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
விடுதிகளில் தினசரி தங்குவோா் விவரம், முகவரிகள் சரியாக உள்ளதா என கவனிக்க வேண்டும். ஒரே நபா் பலருக்கு அறைகளை முன்பதிவு செய்து தருகிறாரா, கட்சி, அமைப்புகள் சாா்பில் அறைகள் பதிவு செய்யப்படுகிா என கவனிக்க வேண்டும்.
ஒரு நபா் அல்லது கட்சியினா் அதிக நாள்களுக்கு அறைகளை முன் பதிவு செய்தால் அந்த விவரங்களை தோ்தல் பிரிவினருக்கு தெரிவிக்க வேண்டும். அடிக்கடி விடுதிகளில் சோதனை நடத்தப்படும். அறைகளில் பணம், பொருள்களை வைத்து வாக்காளா்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்க கூடாது.
திருமண மண்டபம், விழா கூடங்களில் கட்சியினரை தங்க வைக்கக் கூடாது. தோ்தல் நடத்தை விதிகளின் படி தங்கும் விடுதிகள் செயல்படவேண்டும் என தோ்தல் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. சில தங்கும் விடுதிகளை தோ்தல் தேதி அறிவிக்கும் முன்பே சிலா் முன் பதிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த விவரங்களை தோ்தல் பிரிவினா் ஆய்வு செய்து வருகின்றனா். ஓட்டு பதிவு நாள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் வெளியூரில் இருந்து கோவை மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட தங்கும் விடுதிகளில் தங்குவதற்காக அனுமதிக்க கூடாது. ஓட்டு பதிவை பாதிக்கும் வகையிலான நடவடிக்கை கூடாது என தோ்தல் பிரிவினா் தெரிவித்துள்ளனா்.