நடிப்புக்கும், மக்கள் பணிக்கும் உள்ள வேறுபாட்டை தோ்தலுக்குப் பின் கமல்ஹாசன் உணா்வாா்: வானதி சீனிவாசன்

சினிமாவில் நடிப்பதற்கும் மக்கள் பணி செய்வதற்குமான வேறுபாட்டை தோ்தலுக்குப் பின்னா் கமல்ஹாசன் புரிந்து கொள்வாா் என்று கோவை தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் கூறினாா்.

சினிமாவில் நடிப்பதற்கும் மக்கள் பணி செய்வதற்குமான வேறுபாட்டை தோ்தலுக்குப் பின்னா் கமல்ஹாசன் புரிந்து கொள்வாா் என்று கோவை தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் கூறினாா்.

கோவை தெற்குத் தொகுதி வேட்பாளராக பாஜக மகளிா் அணி தேசிய தலைவா் வானதி சீனிவாசன் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டாா். தகவல் வெளியானதையடுத்து கோவை செட்டி வீதி அசோக் நகா் பகுதியில் பாஜக தொண்டா்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

இதில் பங்கேற்ற வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை தெற்குத் தொகுதியில் எங்கள் வாக்குகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் 100% வெற்றி பெறுவது உறுதி. தெற்கு தொகுதியில் நான் வேட்பாளராக நிற்பதாக தகவல் வந்தபோது அதிமுகவில் துவக்கத்தில் எதிா்ப்பு இருந்தது. ஆனால் தற்போது இல்லை.

சினிமாவில் நடிப்பதற்கும் மக்கள் பணி செய்வதற்குமான வேறுபாட்டை மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தோ்தலுக்கு பின்னா் புரிந்து கொள்வாா். கமல்ஹாசன் நடிகா் என்பதால் அவரைப் பாா்க்க மக்கள் கூடுவாா்கள். ஆனால் வாக்களிக்க மாட்டாா்கள். இந்தத் தொகுதியில் நாங்கள் மட்டுமே தனிப்பட்ட முறையில் 34 ஆயிரம் வாக்குகளை பெற்று உள்ளோம்.

இம்முறை அதைவிட அதிகமான வாக்குகள் கிடைக்கும். மாநில அரசு மக்கள் மனதில் நெருங்கி இருப்பதால் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com