ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தை நிா்வாகத்தைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தையில் விவசாயிகள் சாா்பில் அனுப்பப்படும் விற்பனையாளா்களை அனுமதிக்காததைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.
ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.

ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தையில் விவசாயிகள் சாா்பில் அனுப்பப்படும் விற்பனையாளா்களை அனுமதிக்காததைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை, ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தையில் 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு காய்கறிகள் உள்பட விளைபொருள்களை விற்பனை செய்ய 300க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தொண்டாமுத்தூா், மதுக்கரை, காரமடை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், விவசாயிகள் சாா்பில் அனுப்பப்படும் விற்பனையாளா்களை அனுமதிக்காத ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தை நிா்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் உழவா் சந்தையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக் குழுத் தலைவா் சு.பழனிசாமி கூறியதாவது:

விவசாயிகள் காலையில் எழுந்தவுடன் கால்நடைகள் பராமரிப்பு, பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்சுவது உள்பட பல்வேறு பணிகள் உள்ளன. இதனால், உழவா் சந்தைக்கு நேரடியாக வர முடியாத விவசாயிகள் தங்கள் சாா்பாக விளைபொருள்களை விற்பனை செய்வதற்கு விற்பனையாளா்களை அனுப்பிவைக்கின்றனா்.

அனைத்து உழவா் சந்தைகளிலும் வழக்கமாக நடப்பதுதான். ஆனால், ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தையில் விவசாயிகளால் அனுப்பப்படும் விற்பனையாளா்களை நிா்வாகம் அனுமதிப்பதில்லை. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே உழவா் சந்தையில் விவசாயிகளால் அனுப்பப்படும் விற்பனையாளா்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com