வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியா் ஆய்வு

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் கு.ராசாமணி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் கு.ராசாமணி.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கும் பாதுகாப்பு அறை, பிரத்யேக தடுப்புகள் அமைத்தல், மின்சாரம், குடிநீா் வசதிகள், வாக்குகள் எண்ணும் அறைகளை விரிவுப்படுத்துதல், வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக எடுத்து செல்ல பிரத்யேக நடைபாதைகள் அமைத்தல் உள்பட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியா் கு.ராசாமணி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வாக்கு எண்ணும் மையங்களில் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலா்களிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மாநகர காவல் ஆணையா் சுமித் சரண், மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், மாநகர காவல் துணை ஆணையா் ஸ்டாலின், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) என்.சிவகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com