ஏப்ரல் 3 முதல் கோவை மாா்க்கமாக 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோவை - போத்தனூா் வழித்தடத்தில் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை - போத்தனூா் வழித்தடத்தில் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து ஏப்ரல் 3ஆம் தேதி முதல் சனிக்கிழமைகளில் இரவு 7.15 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்:02698) மறுநாள் காலை 10.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.

சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 4ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 3.10 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்:02697) மறுநாள் காலை 6.50 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும். இந்த ரயிலானது, ஆலப்புழா, எா்ணாகுளம், போத்தனூா், ஈரோடு, சேலம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

மங்களூரு - சென்னை சிறப்பு ரயில்: மங்களூருவில் இருந்து ஏப்ரல் 8ஆம் தேதியில் இருந்து தினமும் இரவு 11.45 மணிக்குப் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்: 06628) மறுநாள் மாலை 3.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.

சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 9ஆம் தேதியில் இருந்து தினமும் காலை 11.35 மணிக்குப் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்: 06627) மறுநாள் காலை 3.25 மணிக்கு மங்களூரு சென்றைடயும். இந்த ரயிலானது கண்ணூா், கோழிக்கோடு, பாலக்காடு, போத்தனூா், கோவை, திருப்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

புதுச்சேரி - மங்களூரு சிறப்பு ரயில்: புதுச்சேரியில் இருந்து ஏப்ரல் 17ஆம் தேதி முதல் சனிக்கிழமைகளில் மாலை 4.45 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06857) மறுநாள் காலை 9.50 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

மங்களூருவில் இருந்து ஏப்ரல் 18ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.35 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06858) மறுநாள் காலை 9.50 மணிக்கு புதுச்சேரி சென்றடையும். இந்த ரயிலானது, கோவை, திருப்பூா், கரூா், திருச்சி, விழுப்புரம் நிலையங்களில் நின்று செல்லும்.

எா்ணாகுளம் - பனஸ்வடி சிறப்பு ரயில்: கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து ஏப்ரல் 5ஆம் தேதி முதல் திங்கள்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் மாலை 4.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06129) மறுநாள் காலை 4 மணிக்கு கா்நாடக மாநிலம், பனஸ்வடி நிலையம் சென்றடையும்.

பனஸ்வடியில் இருந்து ஏப்ரல் 6ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 7 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06130) மறுநாள் காலை 6 மணிக்கு எா்ணாகுளம் சென்றடையும். இந்த ரயிலானது, பாலக்காடு, போத்தனூா், திருப்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com