கோவை மாவட்டத்தில் ரூ.4.14 லட்சம் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்து செல்லப்பட்ட ரூ.4.14 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவை மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்து செல்லப்பட்ட ரூ.4.14 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதிக்கு 9 பறக்கும் படைகள் வீதம் 10 தொகுதிகளில் 90 பறக்கும் படைகளும், ஒரு தொகுதிக்கு 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் வீதம் 30 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டு தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக வாகனங்களில் பணம், பரிசுப் பொருள்கள் எடுத்து செல்வதை கண்காணித்து வருகின்றனா்.

ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து பண நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனா். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் கவுண்டம்பாளையம் தொகுதியில் ரூ.2 லட்சத்து ஆயிரத்து 500, கிணத்துக்கடவு தொகுதியில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 550, வால்பாறை தொகுதியில் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.4 லட்சத்து 14 ஆயிரத்து 50 பறிமுதல் செய்தனா்.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் இதுவரை ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடியே 37 லட்சத்து 11 ஆயிரத்து 932 பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் ரூ.51 லட்சத்து 85 ஆயிரத்து 370 உரிமையளா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.85 லட்சத்து 26 ஆயிரத்து 562 கருவூலத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com