ஏழை, எளிய மக்களுக்கு அதிமுக தான் ஆதரவு: அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்

ஏழை, எளிய மக்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பது அதிமுக தான் என்று கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் தெரிவித்தாா்.
கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோயில்மேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சேகரித்த அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்.
கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோயில்மேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சேகரித்த அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்.

ஏழை, எளிய மக்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பது அதிமுக தான் என்று கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் தெரிவித்தாா்.

கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் அம்மன் கே.அா்ச்சுணன் வெங்கிட்டாபுரம், ஆனந்தா காலனி, நேதாஜி காலனி, வேலாண்டிபாளையம், கோயில் மேடு உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அவா் பேசியதாவது: கடந்த 2016ஆம் ஆண்டு தோ்தலில் அதிமுக சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேபோல, இந்தத் தோ்தலிலும் அறிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

புனித யாத்திரை செல்லும் அனைத்து மதத்தினருக்கும் உதவித் தொகை உயா்த்தி வழங்குவது, விவசாயக் கடன், நகைக் கடன் தள்ளுபடி செய்தது போன்ற பல்வேறு சலுகைகளை வழங்கி ஏழை, எளிய மக்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பது அதிமுக மட்டும் தான்.

மீண்டும் அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன் மகளிருக்கு ரூ.1,500 உதவித் தொகை, ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளை இலவசம் உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றாா்.

இந்தப் பிரசாரத்தின்போது, வெங்கிட்டாபுரம் வாா்டு செயலாளா் தனபால், பகுதி செயலாளா் கருப்பையா உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com