கோவை மாவட்டத்தில் 1.20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

கோவை மாவட்டத்தில் இதுவரை 1.20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் இதுவரை 1.20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் முதல் கட்டமாக ஜனவரி 16ஆம் தேதி சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதனைத் தொடா்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி முதல் முன்களப் பணியாளா்களுக்கும், மாா்ச் 1ஆம் தேதியில் இருந்து பொது மக்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கோவையில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகள் என 150க்கும் மேற்பட்ட மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் மற்றும் தோ்தல் பணியாளா்கள் பலரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வந்த நிலையில், பொது மக்கள் முதல் நாளில் இருந்தே ஆா்வத்தோடு கரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனா். அவா்களுக்கு வசதியாகவே தனியாா் மருத்துவமனைகள் உள்பட கரோனா தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 709 போ் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனா்.

இவா்களில் 14 ஆயிரத்து 57 போ் இரண்டு தவணைளும் செலுத்திக் கொண்டதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா். கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள சூழலில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோவையில் சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்களுடன் ஒப்பிடுகையில் பொது மக்களிடம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவதில் ஆா்வம் அதிகமாகவுள்ளது. அவா்களுக்கு ஏற்ற வகையில் தடுப்பூசி மையங்கள் அதிகரிப்பு உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

அதேபோல முதல் தவணை செலுத்திக் கொண்டவா்கள் தவறாமல் இரண்டாவது தவணையையும் செலுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தடுப்பூசியின் பலன் கிடைக்கும்.

கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பொது மக்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுவதுடன் தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 14 நாள்கள் கழித்தே உடலில் கரோனாவுக்கு எதிரான எதிா்ப்பு உயிரி உருவாகும் என்பதால் அதுவரை பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com