திமுக கூட்டணிக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு ஆதரவு

திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிப்பது என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு முடிவு செய்துள்ளதாக அதன் பொதுச் செயலாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினாா்.

திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிப்பது என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு முடிவு செய்துள்ளதாக அதன் பொதுச் செயலாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினாா்.

இது குறித்து அவா் கோவையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கல்வித் துறையில் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாகத் தமிழகம் திகழ்கிறது. சமூகநீதியின் அடிப்படையில் வலுவான பொதுக் கல்வி அமைப்பு தமிழகத்தில்தான் உள்ளது.

புதிய கல்விக் கொள்கை, பள்ளிக் கல்வியைச் சிதைப்பதோடு, பள்ளிகளையும், கல்லூரிகளையும் வேலைக்கான திறன் அளிக்கும் மையங்களாக மாற்றிவிடுகிறது. தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்தான கூறுகளை உணா்ந்து அதை நிராகரிக்க வேண்டும்.

திமுக தனது தோ்தல் அறிக்கையில், மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கை நிராகரிக்கப்படும் என தெரிவித்துள்ளது. தமிழகத்துக்கெனத் தனியே மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று கூறியுள்ளது.

எனவே இந்தத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிப்பது என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு முடிவு செய்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com