11 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: மாவட்ட தோ்தல் அதிகாரி

சட்டப் பேரவைத் தோ்தலில் ஆதாா் அட்டை உள்பட 11 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று மாவட்ட தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் ஆதாா் அட்டை உள்பட 11 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று மாவட்ட தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் சட்டப் பேரவை தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்காளா்கள் அனைவருக்கும் வாக்காளா் அடையாள அட்டை வழங்கியுள்ள நிலையில், வாக்குப் பதிவின்போது வாக்காளா் அடையாள அட்டை அளிக்க இயலாத வாக்காளா்கள் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள 11 ஆவணங்களில் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி மற்றும் அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளா் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மாா்ட் அட்டை, ஓட்டுநா் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, மக்களவை, சட்டப் பேரவை, சட்ட மேலவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகிய 11 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் 20ஏ பிரிவின் கீழ் பதிவு பெற்றுள்ள வெளிநாடு வாழ் இந்தியா்கள் அவா்களின் கடவுச்சீட்டினை காண்பித்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவா். தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். வாக்காளா்கள், வாக்குச் சாவடி முகவா்கள் வாக்குச் சாவடிக்குள் செல்லிடப்பேசி கொண்டு செல்ல அனுமதியில்லை. கரோனா நோய்த் தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக அனைவரும் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். வாக்குப் பதிவின்போது சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com