அத்திக்கடவு - அவிநாசி திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும்

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.
பிரதமா் நரேந்திர மோடியிடம் கோரிக்கை மனுவை அளிக்கிறாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
பிரதமா் நரேந்திர மோடியிடம் கோரிக்கை மனுவை அளிக்கிறாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் செவ்வாய்க்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி சிறப்புரையாற்றினாா். முன்னதாக, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்ட மக்களின் கனவுத் திட்டமான அத்திக்கடவு - அவிநாசி திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும். அதேபோல, நொய்யல் ஆற்றை நவீனப்படுத்தும் பணிக்காக ரூ. 230 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 60 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன.

கீழ்பவானி பாசனத் திட்டத்தை நவீனப்படுத்த ரூ. 930 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஒட்டன்சத்திரம்- தாராபுரம்- அவிநாசிபாளையம் வரையில் 4 வழிச்சாலைக்காக ரூ. 724 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.

பொலிவுறு நகர திட்டப் பணிகள்:

திருப்பூா் மாநகராட்சியில் ரூ. 950 கோடியில் பொலிவுறு நகரம் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல, திருப்பூா் மாநகராட்சியில் ரூ. 1,125 கோடியில் கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக, திருப்பூா் மாநகராட்சி, உடுமலை, பல்லடம் நகராட்சி, அவிநாசி, மடத்துக்குளம் பேரூராட்சிகளில் சுமாா் ரூ. 500 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 75 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஏழை, எளிய மக்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அதிகமான கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. காங்கயத்தில் 2013இல் கலை, அறிவியல் கல்லூரி, அவிநாசியில் 2019இல் புதிய அரசு கலைக் கல்லூரி, பல்லடத்தில் 2020இல் அரசு, கலை அறிவியல் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com