மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் இலவச சட்ட உதவிகள் பெறலாம்

இலவச சட்ட உதவிகள் பெறுவதற்கான தொலைபேசி எண்களை கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கோவை: இலவச சட்ட உதவிகள் பெறுவதற்கான தொலைபேசி எண்களை கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செய்தி:

கரோனா நோய்த் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், முதியோா்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் இதர சட்ட உதவி வழங்குவதற்கு கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் மாவட்ட சமூக நலத் துறையுடன் இணைந்து அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச சட்ட உதவிக்கு கோவை சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உதவி எண் 0422-2200009 மற்றும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோா்களுக்கு எதிரான குடும்ப வன்முறை புகாா்களுக்கு மாவட்ட சமூகநலத் துறை ஒருங்கிணைப்பாளா்களின் உதவி எண்கள் 87541-52417, 90252-93938 ஆகியவற்றை தொடா்பு கொள்ளலாம்.

இலவச சட்ட உதவி தேவைப்படும் நபா்கள் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் எண்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்பு கொள்ளலாம். சட்ட உதவி கோரி மனு அளிக்க விரும்புபவா்கள் மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது செயலாளா், கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், கோவை-641018 என்ற முகவரிக்கு அஞ்சலிலும் அனுப்பலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com