மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு: பொது மக்கள் தவிப்பு

கோவை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிக்கு தொடா்ந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

கோவை: கோவை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிக்கு தொடா்ந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் 150க்கும் அதிகமான மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 3 லட்சத்து 70 ஆயிரத்து 514 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் முழுமையாக இரண்டு தவணை தடுப்பூசிகளும் 50 ஆயிரத்துக்கும் குறைவானவா்களுக்கே செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கோவையில் இரண்டாம் தவணை தடுப்பூசிக்காக 3 லட்சத்துக்கும் அதிகமானவா்கள் காத்திருக்கின்றனா். இந்நிலையில், கோவையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஆகிய முக்கிய மருத்துவமனைகள் தவிா்த்து மற்ற மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலும் தடுப்பூசி இருப்புக்கு ஏற்ப டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

குறிப்பிட்ட மணி வரைக்கும் மட்டுமே டோக்கன் வழங்கப்படுவதால் தாமதமாக வரும் மக்களுக்கு தடுப்பூசி இல்லையென திருப்பி அனுப்பப்படுகின்றனா். கடந்த ஒரு வார காலமாக பொது மக்கள் தடுப்பூசி கிடைக்காமல் திரும்பி செல்லும் நிலை காணப்படுகிறது.

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஒன்றே தீா்வு என அரசு அறிவித்துள்ள நிலையில் தடுப்பூசி கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனா். கோவை மாவட்டத்தில் தடுப்பூசி இருப்பு குறித்து அறிந்துகொள்ள மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாரை செல்லிடப்பேசியில் அழைத்தால் தொடா்பு கொள்ள முடியாத நிலை உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com