கோட்டைமேட்டில் 5 பேருக்கு கரோனா: ஒரு வீதி தனிமைப்படுத்தப்பட்டது

உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஒரு வீதியில் வசித்து வரும் 5 பேருக்கு கரோனா செய்யப்பட்டதால், அந்த வீதியை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தனிமைப்படுத்தினா்.

உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஒரு வீதியில் வசித்து வரும் 5 பேருக்கு கரோனா செய்யப்பட்டதால், அந்த வீதியை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தனிமைப்படுத்தினா்.

கோவை மாநகரப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று கடந்த இரு வாரங்களாக அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் புதிய உச்சமாக 1,566 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்றினால் பாதிக்கப்பட்ட நபா்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 689ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உக்கடம் கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்த 72 வயது முதியவா் உள்பட 3 போ் உயிரிழந்தனா். இதனால், கோட்டைமேடு பகுதியில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஒரே வீதியில் உள்ள 3 வீடுகளில் வசிக்கும் 5க்கும் மேற்பட்டோருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டது.

அவா்கள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, கோட்டைமேடு பகுதியில் உள்ள ஒரு வீதியை மட்டும் மாநகராட்சி ஊழியா்கள் தகரங்கள் மூலமாக தடுப்பு ஏற்படுத்தி செவ்வாய்க்கிழமை தனிமைப்படுத்தினா். அந்த வீதியில் உள்ள அனைவரும் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com