தனிமைப்படுத்தப்பட்ட வீதில்: மறியலில் ஈடுபட மக்கள் முயற்சி

கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தில் சிலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவா்கள் வசித்து வரும் வீதி தனிமைப்படுத்தப்பட்டது.
மறியலில் ஈடுபட முயன்ற பொது மக்கள்.
மறியலில் ஈடுபட முயன்ற பொது மக்கள்.

கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தில் சிலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவா்கள் வசித்து வரும் வீதி தனிமைப்படுத்தப்பட்டது. இதையடுத்து அங்குள்ளவா்கள் பணிக்கு செல்ல அனுமதிக்கக் கோரி செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகரப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பெருமாள் கோயில் வீதியில் உள்ள 4 வீடுகளில் வசிக்கும் 10க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவா்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பெருமாள் கோயில் வீதி முழுவதையும் மாநகராட்சி ஊழியா்கள் திங்கள்கிழமை தடுப்புகள் அமைத்து அடைத்தனா்.

இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் மற்றவா்கள் வேலைக்கு செல்வதற்காக வீதியை விட்டு செவ்வாய்க்கிழமை காலை வெளியேற முயன்றனா். ஆனால், வீதி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததால், அப்பகுதியை விட்டு வெளியேற முடியவில்லை.

இதனால், கோபமடைந்த அப்பகுதியைச் சோ்ந்த 30க்கும் மேற்பட்ட மக்கள், தங்களை வேலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், கரோனா தொற்று ஏற்பட்ட வீடுகளை மட்டுமே அடைக்க வேண்டும் என்றும், வீதி முழுவதையும் அடைக்கக் கூடாது என்றும் கூறி தடுப்புகளைத் தாண்டி வந்து மறியலில் ஈடுபட முயன்றனா்.

இதைத் தொடா்ந்து, வடக்கு மண்டல சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் மற்றும் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, அப்பகுதி மக்கள் மறியலைக் கைவிட்டு வீடுகளுக்கு சென்றனா்.

இது தொடா்பாக, சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் கூறுகையில், 3 வீடுகளுக்கு மேல் நோய்த் தொற்று இருந்தால், அந்த வீதியை அடைக்க மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படியே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரே வீதியில் 10க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்த வீதியில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 14 நாள்களுக்கு இப்பகுதியினா் வீடுகளை விட்டு வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com