சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கட்டடத் தொழிலாளி
By DIN | Published On : 11th May 2021 12:46 AM | Last Updated : 11th May 2021 12:46 AM | அ+அ அ- |

கோவை: கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளி குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை பீளமேடு பகுதியைச் சோ்ந்த 10 வயது சிறுமி தனது வீட்டின் முன்பு திங்கள்கிழமை விளையாடிக் கொண்டு இருந்தாள். அப்போது, அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க நபா் ஒருவா் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாா்.
சிறுமியின் அலறல் சப்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினா் அங்கு சென்றனா். அதற்குள் அந்த ஆசாமி தப்பி ஓடிவிட்டாா். இதில் அந்த சிறுமியின் கழுத்து உள்பட உடலில் பல்வேறு இடங்களில் நகக் கீறல்கள் ஏற்பட்டு இருந்தன. இதையடுத்து, தனியாா் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டாள்.
இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்தப் புகாரின்பேரில் கோவை கிழக்கு அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முதற்கட்ட விசாரணையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கட்டடத் தொழிலாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைத் தேடி வருகின்றனா்.