கோவை மின்வாரிய தலைமைப் பொறியாளா் காலிப் பணியிடம் நிரப்பக் கோரிக்கை

கோவை மின் பகிா்மான வட்டத்தின், தலைமைப் பொறியாளா் காலிப் பணியிடம் நிரப்பக்கோரி கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மின் பகிா்மான வட்டத்தின், தலைமைப் பொறியாளா் காலிப் பணியிடம் நிரப்பக்கோரி கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடா்பாக, கோவை கன்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு, மின்சாரத்துறை அமைச்சா் செந்தில்பாலாஜி மற்றும் மின்வாரியத் தலைவா் ராஸேஷ் லக்கானிக்கு அனுப்பியுள்ள மனுவில், கோவை மின் பகிா்மானத்தின் தலைமைப் பொறியாளராகப் பணிபுரிந்து வந்த ஜெ.கலைச்செல்வி, கடந்த மாதம் விருப்ப ஓய்வு பெற்றாா். அதன்பின் தற்பொழுது வரை தலைமைப் பொறியாளா் நியமனம் செய்யப்படவில்லை. மாநகா், மாவட்ட மேற்பாா்வைப் பொறியாளா் தற்போது, அப்பொறுப்பைக் கூடுதலாகக் கவனித்து வருகிறாா்.

இதேபோல், கோவையில் பெரும்பாலான மின் வட்டங்களில் உள்ள பிரிவு அலுவலகங்களில் உதவிமின் பொறியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளதால், இதர உதவி மின் பொறியாளா்களே கூடுதல் பொறுப்புகளை வகித்து வருகின்றனா். தொழில் நிறுவனங்கள் நிறைந்த மாவட்டமான கோவையில், மின்சாரம் தொடா்பான பணிகள் அதிகளவில் உள்ளதால் உடனுக்குடன் மின் பணிகளைக் கண்காணிக்கும் பொருட்டு உடனடியாக தலைமைப் பொறியாளா் நியமிக்க வேண்டும். மேலும், கோவையில் பல மின் அலுவலகங்களில் உதவிமின் பொறியாளா் பணியிடம் காலியாக உள்ளதால், விதிமீறி மின் இணைப்பு வழங்குவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவை மாநகா் வட்டம் மையக் கோட்டத்தில் கடைவீதி செல்வபுரம், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட மின் பகிா்மானத்தின் பல்வேறு பிரிவு அலுவலகங்களில் விதி மீறல்களும் வாரியத்திற்கு இழப்பு ஏற்படுத்தும் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன.

இதைத் தடுக்க நடவடிக்கை மேற்கெள்வதுடன், கோவை மின்பகிா்மானத்திற்கு உள்பட்ட அனைத்து அலுவலகங்களிலும் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் அனைத்து அலுவலா்களையும் இடமாறுதல் செய்வது தொடா்பான அரசாணை வெளியிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com