கரோனாவால் மன உளைச்சல்:இரு பெண்கள் தூக்கிட்டு தற்கொலை

கோவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளான பெண்கள் இருவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளான பெண்கள் இருவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, கோவில்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மோகன் ராஜ் (38). கூலித் தொழிலாளி. இவருக்கு நந்தினி என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனா். கடந்த 8 நாள்களுக்கு முன்பு குடும்ப உறுப்பினா்கள் நான்கு பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். சிகிச்சை முடிந்து சில நாள்களில் வீடு திரும்பிய பின்னா் நந்தினிக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அவா் மீண்டும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் வீடு திரும்பினாா்.

கரோனாவால் தொடா் அலைச்சலுக்கு உள்ளான நந்தினி மன உளைச்சலுடன் காணப்பட்டுள்ளாா். இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த கோவில்பாளையம் போலீஸாா் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதேபோல கோவை, சிங்காநல்லூா் சுப்பிரமணியம் பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மனைவி ஆனந்த லட்சுமி (35). இருவருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. ரமேஷ் மருத்துவமனையிலும், ஆனந்தலட்சுமி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தனா். இந்நிலையில் தனிமையில் இருந்து விரக்தியடைந்த ஆனந்த லட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக, சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com