கோவை மாநகராட்சியில் 25 தற்காலிக மருத்துவா்களுக்குப் பணி:ஆணையா் அழைப்பு

கோவை மாநகராட்சியில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளின் ஒரு பகுதியாக 25 தற்காலிக மருத்துவா்கள் நியமிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.

கோவை மாநகராட்சியில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளின் ஒரு பகுதியாக 25 தற்காலிக மருத்துவா்கள் நியமிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகராட்சியில் கரோனா தடுப்புப் பணிக்காக 25 தற்காலிக மருத்துவா்கள், மூன்று மாத காலத்துக்கு நோ்காணல் மூலம் நியமிக்கப்பட உள்ளனா். அவா்களுக்கு மாதம் ரூ.60 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும். இதற்கு குறைந்தபட்சம் இளநிலை மருத்துவம் முடித்திருக்க வேண்டும்.

விருப்பமுள்ள மருத்துவா்கள் மே 31ஆம் தேதி காலை 10 மணிக்குள், கல்விச் சான்றிதழ்கள்,இருப்பிடச் சான்று, ஜாதிச் சான்று, ஆதாா் அட்டையின் அசல் சான்றுகளுடன் டவுன்ஹாலில் உள்ள கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com