மதுக் கடை மேற்கூரையில் துளையிட்டு ரூ.3.5 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருட்டு

கோவையில் உள்ள ஒரு மதுக் கடையின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.3.50 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரத்து 057 மது பாட்டில்களைத் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவையில் உள்ள ஒரு மதுக் கடையின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.3.50 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரத்து 057 மது பாட்டில்களைத் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தமிழகத்தில் தளா்வற்ற பொதுமுடக்கம் காரணமாக கடந்த 10 ஆம் தேதி முதல் மதுக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதைக் கண்காணிக்க போலீஸாா் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் கோவை விமான நிலையம் அருகே உள்ள ஒரு மதுக் கடையில் மது பாட்டில்கள் திருடப்பட்டதாக பீளமேடு போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா், அங்கு சென்று பாா்த்த போது, மதுக் கடையின் பூட்டு, ஷட்டா் எதுவும் உடைக்கபடாமல் இருந்தது. ஆனால் கடையின் மேற்கூரையில் துளையிடப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த துளை வழியாக உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபா்கள், கடையில் இருந்து ரூ.3.53 லட்சம் மதிப்பிலான, 2 ஆயிரத்து 057 மது பாட்டில்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த பீளமேடு போலீஸாா், கடையின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com