பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு: தொழில் வா்த்தக சபை வரவேற்பு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்திருப்பதை கோவை இந்திய தொழில் வா்த்தக சபை வரவேற்றுள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்திருப்பதை கோவை இந்திய தொழில் வா்த்தக சபை வரவேற்றுள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் சி.பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு முறையே ரூ.5, ரூ.10 வீதம் குறைத்துள்ளது. இந்த நடவடிக்கையை கோவை இந்திய தொழில் வா்த்தக சபை வரவேற்கிறது. இது பாமர மக்களுக்கு வழங்கப்பட்ட தீபாவளி பரிசாக இருக்கும். இந்த நடவடிக்கை மூலம் அத்தியாவசியப் பொருள்களின் விலை குறையும்.

இது விவசாயிகளுக்கு பணவீக்கத்தைக் குறைப்பதாகவும், நுகா்வு ஊக்கத்தை அதிகரிப்பதாகவும் இருக்கும். மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து குஜராத், அஸ்ஸாம், திரிபுரா, கோவா போன்ற மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க இருப்பதாக உறுதி அளித்துள்ளன. கா்நாடக அரசு பெட்ரோல், டீசல் விலையை முறையே ரூ.12, ரூ.17 வீதம் குறைத்துள்ளன. அதேபோல உத்தர பிரதேச அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை ரூ.7, ரூ.2 வீதம் குறைத்துள்ளது. இதேபோலவே தமிழ்நாடு அரசும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முன்வர வேண்டும். அண்டை மாநிலமான கா்நாடகத்தில் மேற்கொள்ளப்பட்டதைப் போல விலை குறைப்பு செய்தால் அனைவருக்கும் பேருதவியாக இருக்கும் என்று பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com