வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

2021 சட்டப் பேரவைத் தோ்தலில் பணியாற்றியவா்களுக்கு மதிப்பூதியம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா்.

2021 சட்டப் பேரவைத் தோ்தலில் பணியாற்றியவா்களுக்கு மதிப்பூதியம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் கடந்த 2021 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பணியாற்றியவா்களுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் மதிப்பூதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இதனை வழங்க வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகங்களில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க கோவை மாவட்டச் செயலாளா் த.சண்முகராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இதில், தோ்தலில் பணியாற்றியவா்களுக்கு மதிப்பூதியம் வழங்குதல், தோ்தலுக்கு அதிகாரிகள் செலவு செய்து செலவினங்களை வழங்கவும் வலியுறுத்தப்பட்டது. மேலும் நவம்பா் 13 மற்றும் 14, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் பணிகளை புறக்கணிக்கவுள்ளதாகவும் வருவாய்த் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com