மாவட்ட மைய நூலகத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு கோவை மாவட்ட மைய நூலகத்தில் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.
கோவை, ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியைப் பாா்வையிடும் வாசகா்கள்.
கோவை, ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியைப் பாா்வையிடும் வாசகா்கள்.

தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு கோவை மாவட்ட மைய நூலகத்தில் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

மாவட்ட மைய நூலகம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சாா்பில் ஆா்.எஸ்.புரத்திலுள்ள மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் இந்க புத்தகக் கண்காட்சியை மாவட்ட நூலக அலுவலா் இரா.யுவராஜ் தொடங்கிவைத்தாா்.

புத்தகக் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தொடக்க நிகழ்ச்சியில், பள்ளி மாணவா்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாற்றுகளம் நாடகப் பள்ளி நிறுவனா் த.திலீப்குமாா், இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி தமிழ் பேராசிரியா் ந.ராஜேந்திரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

தினமும் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சி நவம்பா் 24ஆம் தேதி நிறைவடைய உள்ளது என்று நூலக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளா் ஆா்.ரங்கராஜன், மாவட்ட மைய நூலகா் பே.ராஜேந்திரன், நூலகா்கள், வாசகா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com