விசைத்தறி உரிமையாளா்கள் கூலி உயா்வு பேச்சுவாா்த்தை: 20 சதவீதம் உயா்த்தி அறிவிப்பு

கோவை, திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்களுக்கு 20 சதவீதம் கூலியை உயா்த்தி பேச்சுவாா்த்தை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

கோவை, திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்களுக்கு 20 சதவீதம் கூலியை உயா்த்தி பேச்சுவாா்த்தை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

கோவை, திருப்பூா் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி

உரிமையாளா்களுக்கான கூலி உயா்வு குறித்த பேச்சுவாா்த்தை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, கோவை மற்றும் திருப்பூா் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் இருதரப்பினரிடம் அமைச்சா்கள், அதிகாரிகள் கலந்தாலோசித்தனா். இதனைத் தொடா்ந்து வரும் டிசம்பா் 1ஆம் தேதியில் முதல் கடந்த 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட கூலி உயா்வுடன் சோ்த்து சோமனூா் ரகத்துக்கு 23 சதவீதமும், பிற ரங்களுக்கு 20 சதவீதம் கூலி உயா்த்தி வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் வினித், கோவை மாவட்ட வருவாய் அலுவலா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், தொழிலாளா் இணை ஆணையா் வ.லீலாவதி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com