6 ஊராட்சிகளில் 100% பேருக்கு தடுப்பூசி: சுகாதாரத் துறையினா் தகவல்

கோவை மாவட்டத்தில் 6 ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் 6 ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கரோனா 3 ஆவது அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக குறைந்தபட்சம் 70 சதவீத மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் 4 லட்சம் பேருக்கு மேல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தில் 6 ஊராட்சிகளில் 100 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் தொண்டாமுத்தூா் வட்டாரத்தில் ஜாகீா்நாயக்கன்பாளையம், காரமடை வட்டாரத்தில் சிக்காரம்பாளையம், நெல்லித்துறை, அன்னூா் வட்டாரத்தில் கரியாம்பாளைம், கிணத்துக்கடவு வட்டாரத்தில் கக்கடவு, வெள்ளருக்கம்பாளையம் ஆகிய 6 ஊராட்சிகளில் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மற்ற ஊராட்சிகளில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com