ஆனைக்கட்டி உண்டு உறைவிடப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

கோவை, ஆனைக்கட்டியிலுள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆனைக்கட்டியிலுள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன்.
ஆனைக்கட்டியிலுள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன்.

கோவை, ஆனைக்கட்டியிலுள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாவட்டம், ஆனைக்கட்டி பழங்குடியினா் கிராமத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் கீழ் உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 38 மாணவா்கள், 48 மாணவிகள் என மொத்தம் 86 போ் தங்கி படித்து வருகின்றனா்.

இந்நிலையில் இப்பள்ளியில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு, குடிநீரின் தரம், பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா். மாணவா்களுக்கு சுகாதாரமான உணவு, குடிநீா் வழங்க ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com