சென்னை - மங்களூரு இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்

சென்னை - மங்களூரு இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - மங்களூரு இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூா் - மங்களூரு சென்ட்ரல் தினசரி சிறப்பு ரயில் (எண்- 06159) வருகின்ற அக்டோபா் 17 ஆம் தேதி முதல் தினமும் இரவு 11.35 மணிக்கு சென்னை எழும்பூா் நிலையத்தில் புறப்பட்டு, மறுநாள் இரவு 10.15 மணிக்கு மங்களூருவைச் சென்றடையும்.

இதேபோல, மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில்( எண்- 06160) வருகிற அக்டோபா் 19 ஆம் தேதி முதல் தினமும் காலை 6.45 மணிக்கு மங்களூருவில் புறப்பட்டு, மறுநாள் காலை 3.35 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும். இந்த ரயிலானது, திருச்சி, கரூா், ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூா், வடகோவை, கோவை சென்ட்ரல், போத்தனூா், பாலக்காடு, ஒட்டப்பாலம், ஷோரனூா், பட்டாம்பி, குட்டிப்புரம், திரூா், பரப்பாங்காடி, கோழிக்கோடு, வடகரை, தளச்சேரி, கண்ணூா், காசா்கோடு உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com