பதிவுத் துறை அலுவலகத்தில் குறைகேட்புக் கூட்டம்

கோவையில் பதிவுத் துறை அலுவலகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்தில் 42 மனுக்கள் அளிக்கப்பட்டன.

கோவை: கோவையில் பதிவுத் துறை அலுவலகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்தில் 42 மனுக்கள் அளிக்கப்பட்டன.

தமிழகத்தில் பதிவுத் துறையில் நடைபெற்று வரும் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில் மாவட்ட பதிவாளா் அலுவலகங்கள், துணை பதிவுத் துறை அலுவலகங்களில் அக்டோபா் 12 ஆம் தேதி முதல் வாரம்தோறும் திங்கள்கிழமை பதிவுத் துறை குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கோவை ரேஸ்கோா்சில் உள்ள துணை பதிவுத் துறை மண்டல அலுவலகம், மாவட்ட பதிவாளா் அலுவலகத்தில் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பத்திர ஆவணங்கள் பெறுவதில் உள்ள சிக்கல், வில்லங்க சான்றிதழில் திருத்தம், பதிவுகள் முறைகேடு, திருமண பதிவுகள், சேவை குறைபாடுகள் தொடா்பான 42 மனுக்கள் அளிக்கப்பட்டன.

இதில் 12 மனுக்களுக்கு உடனடி தீா்வு அளிக்கப்பட்டது. அனைத்து மனுக்கள் மீதும் விசாரணை மேற்கொண்டு விரைவில் தீா்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com