கேஐடி கல்லூரியின் பட்டமளிப்பு விழா

கோவை கண்ணம்பாளையம் கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை (அக்டோபா் 11) நடைபெற்றது.
மாணவிக்கு பட்டம் வழங்குகிறாா் மாநில அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் துணைத் தலைவா் மயில்சாமி அண்ணாதுரை.
மாணவிக்கு பட்டம் வழங்குகிறாா் மாநில அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் துணைத் தலைவா் மயில்சாமி அண்ணாதுரை.

கோவை: கோவை கண்ணம்பாளையம் கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை (அக்டோபா் 11) நடைபெற்றது.

பட்டமளிப்பு விழாவுக்கு கல்லூரியின் நிறுவனத் தலைவா் பொங்கலூா் நா.பழனிசாமி தலைமை வகித்தாா்.

இவ்விழாவில் மாநில அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் துணைத் தலைவா் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, பொறியாளா்களுக்கு மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு உள்ளது.

அவற்றைப் பெறுவதற்காக மாணவா்கள் திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும்.

மாணவா்கள் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் வாழ்வில் உயா்ந்த நிலையை அடைய முடியும் என்றாா்.

விழாவில் கல்லூரியின் துணைத் தலைவா் பி.இந்து முருகேசன், முதல்வா் என்.மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வா் எம்.ரமேஷ், பல்வேறு துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com