ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் மேம்பாட்டு சிறப்பு மையம் தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் மேம்பாட்டுக்கான சிறப்பு மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
மாணவா் மேம்பாட்டு சிறப்பு மையத்தை திறந்துவைக்கிறாா் கல்லூரியின் முதல்வா் சிவகுமாா்.
மாணவா் மேம்பாட்டு சிறப்பு மையத்தை திறந்துவைக்கிறாா் கல்லூரியின் முதல்வா் சிவகுமாா்.

கோவை: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் மேம்பாட்டுக்கான சிறப்பு மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும், ஹனிவெல் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐ.சி.டி. அகாதெமி மூலம் மாணவா் மேம்பாட்டு சிறப்பு மையத்தை அமைத்துள்ளது.

இதன் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வரும் செயலருமான பி.எல்.சிவகுமாா் தலைமை வகித்தாா். கணினி அறிவியல், காக்னிடிவ் சிஸ்டம்ஸ் துறைத் தலைவா் கிருஷ்ணப்பிரியா வரவேற்றாா்.

ஐ.சி.டி. அகாதெமியின் திட்டங்கள் செயலாக்கப் பிரிவுத் தலைவா் கே.ஏ.விஜயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பு மையத்தைத் தொடங்கிவைத்தாா்.

இந்த மையம் மூலம் பேராசிரியா்கள், மாணவா்களுக்குத் திறன் வளா்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சியின் முடிவில் மாணவா்களுக்கு உலக அளவில் வாய்ப்புகளை உருவாக்கித் தரவல்ல மைக்ரோசாப்ஃட் நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கப்படும் என்று விஜயன் தெரிவித்தாா்.

விழாவில் ஐ.சி.டி. அகாதெமி நிா்வாகிகள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்துகொண்டனா்.

தகவல் தொழில்நுட்பத் துறை இணைப் பேராசிரியா் சி.தீபா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com