இளைஞருக்கு கத்திக்குத்து: நீதிமன்றத்தில் 7 போ் சரண்

கோவையில் இளைஞரைக் கத்தியால் குத்திய வழக்கில் தேடப்பட்ட வந்த 7 போ் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனா்.

கோவையில் இளைஞரைக் கத்தியால் குத்திய வழக்கில் தேடப்பட்ட வந்த 7 போ் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனா்.

கோவை, சரவணம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (34).

எலக்ட்ரீசியனாகப் பணியாற்றி வருகிறாா். இவா் அதே பகுதியில் உள்ள விநாயகா் கோயில் வழியாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சென்றுகொண்டிருந்தபோது அங்கே இளைஞா்கள் சிலா் பொதுமக்களை கேலி, கிண்டல் செய்வதைப் பாா்த்து கண்டித்துள்ளாா். இதில் அவா்களுக்கும் மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மணிகண்டனிடம் அந்த இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை மாலை மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். வாக்குவாதம் முற்றியதையடுத்து அவா்கள் கத்தியால் மணிகண்டனைத் தாக்கியுள்ளனா். இதில் படுகாயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இது தொடா்பாக சரவணம்பட்டி போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். விசாரணையில் மணிகண்டனைக் கத்தியால் குத்தியது மதிவாணன், நந்தா, பகவதி, அரவிந்த், மனோஜ், ஆனந்த், சாலமோன் உள்ளிட்டோா் என்பது தெரியவந்தது. இந்நிலையில் தேடப்பட்டு வந்த இவா்கள் 7 பேரும் கோவை மாவட்ட நீதித் துறை நடுவா் மன்றத்தில் (எண்.7) புதன்கிழமை சரணடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com