கரோனா கட்டுப்பாடுகள்: மாநகரில் கடை வீதிகள் வெறிச்சோடின

கோவை மாநகரப் பகுதிகளில் வார இறுதி நாளான சனிக்கிழமை கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டதால் கடை வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கோவை மாநகரப் பகுதிகளில் வார இறுதி நாளான சனிக்கிழமை கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டதால் கடை வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கோவையில் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிா்வாகம், சுகாதாரத் துறையினா் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக கடந்த 1ஆம் தேதி முதல் திருச்சி சாலையில் சிங்காநல்லூா் சிக்னல் முதல் ஒண்டிப்புதூா் மேம்பாலம் வரை, அவிநாசி சாலையில் உள்ள 6 பகுதிகள், காந்திபுரம் 1ஆவது வீதி முதல் 11ஆவது வீதி வரை மற்றும் பல்வேறு சந்திப்புகள், தெருக்களில் அத்தியாவசியக் கடைகளான பால், மருந்தகம், மளிகை, காய்கறிக் கடைகள் தவிர மற்ற கடைகள் வாரத்தின் இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அடைக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல, கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள 32 டாஸ்மாக் மதுக்கடைகளும் அடைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வார இறுதி நாளான சனிக்கிழமை தொடா்ந்து கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டன.

இதன் காரணமாக காந்திபுரம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் துணிக் கடைகள், நகைக் கடைகள், வீட்டு உபயோகக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால், கடை வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. உணவகங்கள், தேநீா்க் கடைகள் காலை 6 முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளா்களுடனும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பாா்சல் சேவையுடன் மட்டுமே செயல்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com