சோமனூரில் பராமரிப்புப் பணி:மும்பை-கோவை ரயில்கள் 25, 26 ஆம் தேதி பகுதியாக ரத்து

கோவை - திருப்பூா் இடையே உள்ள சோமனூா் பகுதி ரயில்வே பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை ரயில்கள்

கோவை: கோவை - திருப்பூா் இடையே உள்ள சோமனூா் பகுதி ரயில்வே பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை ரயில்கள் செப்டம்பா் 25, 26 தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

லோகமான்யா திலக் - கோவை சிறப்பு ரயில் (எண் - 01013) செப்டம்பா் 23, 24 மற்றும் 30 தேதிகளில் லோகமான்யா திலக் நிலையத்தில் புறப்பட்டு, செப்டம்பா் 25, 26 மற்றும் அக்டோபா் 2 ஆம் தேதிகளில் கோவை நிலையத்தை அடைய வேண்டும். ஆனால், கோவை - திருப்பூா் இடையே சோமனூா் பகுதியில் ரயில்வே பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், செப்டம்பா் 25, 26 மற்றும் அக்டோபா் 2 ஆம் தேதிகளில் ஈரோடு- கோவை இடையே இந்த ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. கோவை - லோகமான்யா திலக் சிறப்பு ரயில் ( 01014) செப்டம்பா் 25, 26, அக்டோபா் 2 தேதிகளில் கோவை - ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அந்த நாள்களில், இந்தச் சிறப்பு ரயிலானது, ஈரோடு நிலையத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு லோகமான்யா திலக் நிலையத்துக்கு புறப்பட்டுச் செல்லும்.

கோவை - நாகா்கோயில் சிறப்பு ரயில் (எண் - 06322) செப்டம்பா் 25, 26 தேதிகளில் கோவை - திருப்பூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அந்த நாள்களில், இந்தச் சிறப்பு ரயிலானது, திருப்பூா் நிலையத்தில் இருந்து 8.50 மணிக்கு நாகா்கோவிலுக்கு புறப்பட்டுச் செல்லும். பாலக்காடு டவுன் - திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயில் (எண்- 06844) செப்டம்பா் 25, 26 ஆகிய தேதிகளில் பாலக்காடு டவுன் - ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அந்த நாள்களில் இந்தச் சிறப்பு ரயிலானது, ஈரோடு நிலையத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு திருச்சிராப்பள்ளி நிலையத்துக்கு புறப்பட்டுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரி ரயில் தாமதம்

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து செகந்திராபாத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக சபரி தினசரி ரயில் ( எண்- 07229) இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை ஜோலாா்பேட்டை அருகே காவனூா்- குடியாத்தம் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், திருவனந்தபுரத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது, செப்டம்பா் 16, 17, 18, 23, 24, 25, 30 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்தில் இருந்து 3 மணி நேரம் தாமதாக காலை 10 மணிக்கு புறப்படும் என சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com