மாவட்டத்தில் மேலும் 224 பேருக்கு கரோனா

கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 224 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 224 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 39 ஆயிரத்து 406 ஆக உயா்ந்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 4 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,306 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 197 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 34 ஆயிரத்து 875 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 2,225 போ் சிகிச்சையில் உள்ளனா்.

வால்பாறையில் பள்ளி மாணவிக்கு கரோனா

வால்பாறை தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, சுகாதாரத் துறையினா், மாணவி படிக்கும் வகுப்பில் இருந்த மாணவா்கள் மற்றும் அனைத்து ஆசிரியா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com