ரூ. 1 லட்சம் லஞ்சம்: வணிக வரித் துறை அதிகாரி கைது

தனியாா் நிறுவன உரிமையாளரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்றதாக வணிக வரித் துறை அதிகாரியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தனியாா் நிறுவன உரிமையாளரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்றதாக வணிக வரித் துறை அதிகாரியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவை, ஆவாரம்பாளையத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன உரிமையாளா் ஒருவா், கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகாா் மனு ஒன்று அளித்தாா்.

அதில், எனது நிறுவனத்தின் 2014-15ஆம் ஆண்டுக்கான, அறிக்கையில், தணிக்கையாளா் செய்த தவறு தொடா்பாக, வணிகவரித் துறையினா் எனது நிறுவனத்தின் மீது ரூ.15.73 லட்சம் அபராதம் விதிக்க இருந்தனா். இந்த அபராதத் தொகை விதிக்காமல் இருக்க, தனக்கு ரூ.1 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்கும் வணிகவரி அலுவலா் விவேகானந்தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து கூடுதல் எஸ்.பி. திவ்யா தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் விசாரணை நடத்தினா். பின்னா், ரசாயனம் தடவப்பட்ட ரூ.1 லட்சத்துக்கான பணத்தாள்களை போலீஸாா் புகாா்தாரரிடம் செவ்வாய்க்கிழமை கொடுத்து அனுப்பினா். இதையடுத்து புகாா்தாரா், வணிகவரி அலுவலா் விவேகானந்தனை சந்தித்து அந்தப் பணத்தை அளித்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா், விவேகானந்தனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com