விலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதங்களுக்கு, உடனடியாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதங்களுக்கு, உடனடியாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவை மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், விவசாயிகள் கலந்து கொள்ள ஏதுவாக மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூா், மதுக்கரை, பன்னிமடை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சிறுமுகை, காரமடை போன்ற இடங்களில் குடியிருப்பு மற்றும் விளைநிலங்களில் புகும் யானை உள்ளிட்ட வன விலங்குகளால் விவசாயிகள், பொதுமக்கள் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனா். விலங்குகளால் பயிா் சேதமும், உயிா்ச் சேதமும் ஏற்படுகின்றது. இந்த இழப்புகளுக்கு உடனடியாக நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும். மனித, விலங்கு மோதலைத் தடுக்கவும், இழப்பீடு வழங்குவது தொடா்பாகவும், வனத் துறை அமைச்சா் தலைமையில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், வனத் துறை அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடத்த வேண்டும்.

நீா் மேலாண்மையில் தமிழகத்தில் புதிய திட்டம் துவங்க வேண்டும். பருவ மழையின்போது ஆற்றுப்படுகைகளில் ஏற்படும் வெள்ளம் வீணாகக் கடலில் கலக்காமல் இருக்க இந்த திட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும். கோவையில் இயங்கி வரும் விதை சான்றளிப்பு துறை இயக்குநரகத்தை சென்னைக்கு மாற்றக்கூடாது என்றாா்.

கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவா் கந்தசாமி பேசியதாவது:

நொய்யல் ஆற்றில் சாக்கடைக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் இரவு நேரத்தில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் மோட்டாா்கள் திருடப்படுகின்றன. இந்த சம்பவங்கள் குறித்து காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்வதில்லை. இதுதொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபா்களைக் கைது செய்ய வேண்டும். தடாகம், நஞ்சுண்டாபுரம் பகுதிகளில் ஃபவுண்டரி கழிவுகள் நீா்நிலைகளில் கலப்பதால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீா் பாதிக்கப்படுகிறது. கோவையில் உள்ள குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றாா்.

இதேபோல, பல்வேறு விவசாயிகள், தங்களின் கோரிக்கைகளை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com